காட்சி #15: பின்னணி காட்சி காட்சி X I : இரவு 7.15 மணி முதல் 8 மணி வரை INT @ IIM -B மாணவிகள் விடுதி-சிவ சங்கரியின் அறை
திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன்
By K.Senthilkumaran
அழுது அழுது களைத்துப்போன சிவ சங்கரி ஆழ்ந்து தூங்குகின்றாள். சொல்போன் ஒலிக்கின்றது. செல்போன் திரையில் தாமரை என்று மின்னுகின்றது. பார்த்தவள் முகம் கழுவ செல்கின்றாள். முகம் துடைக்கும் சிவ சங்கரியின் கண்கள் அழுது அழுது சிவந்து உள்ள close up காட்சி.
போனை எடுத்து தாமரைக்கு அழைப்பு செய்கின்றாள். ரிங் டோன்......
[இன்டர் கட் ]
மறு முனையில் போனை எடுக்கும் தாமரை "என்ன சிவா படிக்கிறியா ..., disturb செய்யறேனா.., சாரி பா" என்றவாறே "பெருமாள் முருகனின் பூக்குழி நாவலை" மூடுகின்றாள்.
[இன்டர் கட் ]
"இல்ல தாமர தூங்கிட்டேன்..., பிரியா தான் இருக்கேன் ...,என்ன செய்துகிட்டு இருக்க பா " என்றவாறே படுக்கையை சிவ சங்கரி சரி செய்கின்றாள்
[இன்டர் கட் ]
"எங்க intercaste marriage கதை மாதிரியே ஒரு நாவல் படித்துக்கொண்டு இருக்கேன்" என்னும் தாமரை [ பூக்குழி புத்தகம் front page close up ல் காட்டப் படுகின்றது.]
[இன்டர் கட் ]
"என்ன professor என்னுமா வரலை ? " என்ற சிவ சங்கரி " ரிலேசன்ஸ் எல்லாம் கம்ப்ரமிஸ் ஆகிட்டாங்கலா ? என கேட்க....
[இன்டர் கட் ]
"நீவேற சிவா இது தமிழ்நாடு பா ...., இங்கு தமிழ் உணர்வை விட cast பீலிங் தான் அதிகமிருக்கும் நம்ம மக்களுக்கு" என்று கூறி தாமரை சிரிக்கின்றாள். [ பூக்குழி நாவலின் பின் அட்டையில் உள்ள பெருமாள் முருகனின் படமும் அதில் உள்ள நாவல் பற்றிய சிறு விமர்சனமும் tight close up ல் காட்ட படுகின்றது ]
[இன்டர் கட் ]
"ஏன் என்னைய நா பாத்த சாதிபார்க்காத தமிழச்சியா தெரியலையா உனக்கு .... நான் இருக்கும் வரை எதுக்கும் கவலை படாதே கண்ணு " என்றவாறே சோகமான மன நிலையிலும் சிரிக்கின்றாள் சிவ சங்கரி
[இன்டர் கட் ]
"thanks lot சிவா ..., marriage ஆகாம கூட கருமுட்டையை தானம் செய்ய எப்படி பா தோணுச்சி ? " - தாமரை
[இன்டர் கட் ]
"நீ எனக்கு friend மட்டுமா டி? அதுக்கும் மேல என் உயிர் டி ! இது வரைக்கும் நீ தான் எல்லா உதவியும் எனக்கு செய்யுரே அதான் நீ கேட்ட உடன் எதையும் யோசிக்காம சரினு செல்லிட்டேன்"
[இன்டர் கட் ]
"வீட்டில் சொன்னியா பா " - - தாமரை
[இன்டர் கட் ]
"இல்லை தாமரை சொல்லலை [pass] ...... யாருக்கோ முன்ன பின்ன தெரியாதவங்களுக்கா கொடுக்கின்றேன். உனக்கு தானே பா ? குழந்தையை நல்லா படிக்க வை என்ன ?" - சிவ சங்கரி
[இன்டர் கட் ]
" ஆமாம் சிவா... உன்னை மாதிரியே அழகான ,அன்பான ,அறிவான குழந்தை பிறக்கும் இல்லையா பா ? அதை நல்லா படிக்க வெச்சி நீ படிக்கிற I I M ல் சேர்கின்றேன் பா " - தாமரை
[இன்டர் கட் ]
"குழந்தைக்கு உரிமை கோரி எல்லாம் வர மாட்டேன் தாமரை பயப்படாதே .... கன்னத்தில் முத்தமிட்டால் படம் மாதிரி துர இருந்து சந்தோசபடுவேன் பா ....... "என்று கூறிய சிவ சங்கரி சோகமாக சிரிகின்றாள்
"சரி dinner க்கு late ஆகுது மெஸ் close செய்துட்டாங்கனா magi நுடல்ஸ் தான் சாப்பிட வேண்டி இருக்கும்... பாய் பாய் Good Night "
[இன்டர் கட் ]
"Good Night siva " - தாமரை
காட்சி #15: பின்னணி காட்சி காட்சி XI முற்றும்
No comments:
Post a Comment