Sunday, July 27, 2014

வினவில் தென்றலின் உளறல்களும் அதற்கான பதில்களும் replay to Thendral Part I

தென்றல் அவர்கள், சிதைவடைந்த மனதின் காரணமாக,மன பிரம்மை காரணமாக இட,கால தொடர்பு அற்ற விடயங்களை முடிச்சு போட்டு அவரை மலையகத் தமிழர் நலனுக்காக பேசுவது போல காட்டிகொள்கின்றார். தென்றல் அவர்களீன் ஒவ்வொரு சுய முரண்பாடுகளையும் தொகுப்பது என்பது சிந்துபாத் கதை போல நீளும் என்பதால் ஒருசில முரண்பாடுகளை மட்டும் ஆய்வு செய்ய போகின்றேன்.
---------------------------
தென்றல் உளறல் I ://இதுவும் உங்கள் தவறுதான். வட கிழக்கிலே வாழும் மலையகத் தமிழர்களை அறியாதவராக இருப்பது எந்த விதத்தில் நியாயம்? வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் சிறிதும் இல்லையா?//

[1]இலங்கையின் மலையகம் இலங்கை தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. மலையகத் தமிழர் என்போர் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களை குறிக்கும். இலங்கையின் மலையகம் மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்கள், சிங்கள மக்கள் அதிகம் வாழும் இலங்கை தீவின் நடுப்பகுதியில் அமைந்து உள்ளன.தென்றல் கூருவது போல் வட கிழக்கில் மலையகத் தமிழர் வாழுகின்றனர் என்ற கருத்து தவறானது. ஒருவேளை மலையகத் தமிழர் இன்று தமிழ் ஈழத்தீன் வடக்கு ,கீழக்கு பகுதியில் இடம் பெயர்ந்தால் அப்போது அவர்கள் தம்மை ஈழ தமிழர்களாக அடையாளம் காட்டி கொளவதில் தென்றலுக்கு என்ன பிரசனை ?

--------------------------


தென்றல் உளறல் II//இதுதவிர 3இலட்சம் மலையகத் தமிழர்கள் அக்காலத்திலேயே நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். அதாவது இலங்கையின் மத்தியப்பகுதியோ, வடக்கு கிழக்கு அல்லாமல், இந்திய பிரஜையாகவோ அல்லாமல் வைக்கப்பட்டிருந்தமைக்கு யார் பொறுப்பேற்றுக்கொண்டது?ஈழத் தமிழர் ஈழத் தமிழர் என்று வாய் கிழிய கத்தினால் போதுமா?//

இங்கு உங்களுடன் வாதாடும் நானோ, வியசனோ, மலையகத் தமிழர்களீன் ஞாயமான அபிலாசைகளை, உரிமைகளை எதிர்த்து குரல் கொடுத்தால் வேண்டுமானால் எம்மை பார்த்து நீங்கள் இந்த கேள்விகளை எழுப்பலாம். மலையகத் தமிழர்களீன் விடயத்தில் வியாசன் வைக்கும் கருத்துகள் [feedback 59] தவறு என்று நீங்கள் வாதாடும் போது ,நீங்கள் கூறுவது என்ன ?
“மலையகத் தமிழர்களை ஈழத் தமிழர்கள் என்ற பட்டிக்குள் அடைக்கலாம் என்பது உமது வாதம். ஆனால் வரலாறு அதுவல்ல. ஈழப் போராளி குழுக்கள் ஆரம்பத்திலிருந்தே மலையகத் தமிழர்களின் நலன்களை பிரதிபலிக்கவில்லை.”

ஆனால் நீங்கள் எம்முடன் வாதாடும் போது [feedback 58.1.1.1] “சிறுபான்மை தேசிய இனம் குறித்த கீழ்கண்ட விளக்கத்தைக் கொஞ்சம் கவனியுங்கள். ஈழம் தேவை ஒரு நேர்மையான மீளாய்வு-பக்கம் 13-15″ இதை மேற்கோள் காட்டி கூருவது என்ன ?

“மலையகத்தில் தோட்டத் தொழிலில் இருக்கக்கூடிய, பூர்விகமாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள், நம்முடைய வார்த்தைகளில் சொல்லப்போனால் சிறுபான்மை தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் கூட. ஈழத் தமிழர்கள் எனும் தேசிய இனத்திற்குக் கீழே இருக்க வேண்டியவர்கள் என்ற கண்ணோட்டத்தில் சொல்கிறார்கள்.தனி ஈழம் என்று சொன்னால், விடுதலைப் புலிகளினுடைய கண்ணோட்டத்தில் மலையகத் தமிழர்களும் சேர்ந்துதான். அவர்கள் வெளியிட்டிருக்கும் வரைபடத்தில் தமிழீழம் மலையகத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆனால் உண்மையில் 1815-க்கு பிறகு ஆங்கிலேயர்களால் குடியமர்த்தப்பட்ட, தமிழ் நாட்டை பூர்விகமாக கொண்ட தமிழர்கள் தனி இனத்தவர், தேசிய சிறுபான்மை இனத்தவர்கள்.”

My question:
——————–
தென்றல், மேல் உள்ள மேற்கோள், சிங்களவன் மலையகத் தமிழர்களை குடிமக்களாகவே அங்கிகரிக்காத நிலையில், விடுதலை புலிகள் மலையகத் தமிழர்களை தம் இனமாக[ஈழ தமிழராக] சேர்த்து அவர்களுக்காகவும் போராடியதை தானே காட்டுகின்றது???????????? இந்த நீலையீல் ஈழ தமிழர்களை பிரித்து வைக்க நினைக்கும் உள் அடி தன வேலை உங்களுக்கு எதற்கு தென்றல் ?
------------------------

தென்றல் உளறல் III//இது இரட்டை வேடமாகும். என் பார்வையில் ஈழத்திற்கு விமர்சனம் வைத்திருப்பதைப்போன்று பாராளுமன்ற ஜனநாயகத்தில் சீரழிபவர்களை அடையாளங்கண்டு நேபாள் சூழ்நிலையை ஒட்டி பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. ஒரு பக்கம் பாராளுமன்ற ஜனநாயகத்தில் சீரழிந்தவர்கள் மாமா வேலை என்று சொல்கிற நீங்கள் செல்வநாயகம் போன்றவர்கள் அதே பாராளுமன்ற ஜனநாயகத்தில் சுயஆட்சியை தேடுகிற பொழுது தந்தை என்று சொல்கிறீர்கள்.//

[1]வர்க்க போராட்டத்தை காட்டிகொடுத்த,பாராளுமன்ற பன்றி தொழுவத்தீல் ருசி கண்ட நேப்பாள கம்யுனிஸ்டுகளை, தனி தமிழர் மாநிலம் கோரிய தந்தை செல்வநாயகம் அவர்களுடன் நீங்கள் ஒப்பீடு செய்து பார்க்கும் அறிவு மெய் சிலிர்க்கீன்றது.வர்க்க போராட்டம் என்பதும், தம் தேசிய மக்களுக்கான குறைந்த பட்ச உரீமையான தனி தமிழர் மாநிலம் என்ற கோரிக்கைகாக ஜனநாயக முறையில் போராடுவதும் ஒன்றா ? வர்க்க போராட்ட நோக்கமும் ,பண்புகளும் தேசிய இன உரிமைகான நோக்கமும்,பண்புகளும் வேறு வேறு என்னும் போது, அதை பற்றிய அடிப்படை அறிவு தென்றலுக்கு இல்லாமைக்காக நான் வருந்துவதை தவீர வேறு என்ன செய்ய முடியும் ?

தென்றல் உளறல்IV//நேபாளை சூழ் கொண்ட தரகுமுதலாளித்துவம், ஏகாதிபத்திய நலன்கள், ரா போன்ற உளவுபிரிவுகளின் இந்திய உள்ளடி வேலைகள் இலங்கைக்கும் பொருந்தும் என்கிற பொழுது அங்கே பிராபகரன் போன்றோர் பாசிச நடவடிக்கைகளில் சீரழிந்ததை மறைத்துவிட்டு போரிலே இறந்தது தியாகம் என்று நிலீக்கண்ணீர் வடிக்கீறிர்கள்.//

[2]விமர்சனம் இன்றி விடுதலை புலிகளை ஆதரிக்கும் முட்டாள்களீடம் வேண்டுமானால் நீங்கள் இக் கேள்வியை எழுப்பலாம். எம் நிலை என்ன எனில் இஸ்லாமிய தமிழர்களை வடக்கில் இருந்து வீரட்டியது, கீழக்கீல் கொன்றது ஆகிய இரண்டுமே விடுதலை புலிகள் செய்த மாபெரும் தவறுகள் ,பாசிச நடவடிக்கைகள். வியசனுடன் நான் நடத்தும் விவாதங்களில் இக் கேள்விகளை எழுப்பியது நான் தான் என்பதை குறிப்பிட விறுப்புகின்றேன்.

[3]ஈழத்து மே 2009 மானுட பேரழீவுக்காக நான் வடிப்பது நிலீக்கண்ணீர் என்று அவதுறு செய்யும் தென்றல், அதே பேரழீவுக்காக தமிழகத்தில் தன் உயிரை தீயீட்டு துறந்தானே எம் தம்பி அவனின் இருதி ஊர்வளத்தில் கலந்து கொண்ட ம க இ க தோழர்களை பார்த்தும் இக் கேள்வியை கேட்க துப்பு இருக்கா சனியன் பிடித்த,சிங்கள பேரினவாத அடிவருடி,சிங்கள கைகூலீ தென்றலுக்கு ??????


-----------------------------

தென்றல் உளறல் V//மறுபக்கம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைக்கு வருந்துவதாக சொல்லும் தாங்கள் மலையகத் தமிழ்ர்கள் என்று வரும் பொழுது மட்டும் ஈழத் தமிழர் குழுக்கள் போடுகிற பிச்சையை வாங்கிக்கொள்ளவேண்டும் என்று அடம்பிடிக்கீறிர்கள்.//

எத்துனை முறை உளறினாலும் ஒரே பதில் தான் சித்தம் கலங்கிய தென்றலுக்கு :

சிங்களவன் மலையகத் தமிழர்களை குடிமக்களாகவே அங்கிகரிக்காத நிலையில், விடுதலை புலிகள் மலையகத் தமிழர்களை தம் இனமாக[ஈழ தமிழராக] சேர்த்து அவர்களுக்காகவும் தான் போராடினார்கள்

--------------------------

தென்றல் உளறல் VI //இது தான் உங்கள் சுயமுகம். நீங்கள் மட்டுமில்லை தான் சார்ந்து இருக்க விரும்புகிற அரசியலுக்கு மார்க்சியம், கம்யுனிசம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற பல வார்த்தைகளை அலங்கரித்துவிட்டு அண்ணன் பிராபகரன் என்பார்கள் பலபேர்.//

மார்சியம்-லெனினியம் வழிகாட்டும் வர்க்க போராட்டத்துக்கான வழி முறைகள் தேசிய இன உரிமைகளீன் சுய நிர்ணய உரிமையையும் உள்ளங்கியது தான் என்ற விடயத்தை ம க இ க தொழர்கள் தென்றலுக்கு வகுப்பு எடுத்தால் நலம்

--------------------------

தென்றல் உளறல் VII//நீங்களாவது பராவயில்லை. கலாச்சாரப் புரட்சி சர்வாதிகாரம் என்று சொல்பவர்கள் எத்துணை கம்யுனிஸ்டுகளை கொன்றழித்தார்கள் தெரியுமா என்று கதறுவார்கள். கூரிய விமர்சனத்தை கம்யுனிஸ்டுகளுக்கு வைத்துவிட்டு, அமெரிக்க ஜனநாயகம் ஆகா ஒகோ என்று சொல்வதைப்போல தந்தை செல்வநாயகம், அண்ணன் பிராபகரன் என்று போரிலே உயிர் துறந்தார்கள் என்று வியந்து ஓதுகிறீர்கள்.//

எத்துனை முறை உளறினாலும் ஒரே பதில் தான் சித்தம் கலங்கிய தென்றலுக்கு :

ஈழத்து மே 2009 மானுட பேரழீவுக்காக நான் வடிப்பது நிலீக்கண்ணீர் என்று அவதுறு செய்யும் தென்றல், அதே பேரழீவுக்காக தமிழகத்தில் தன் உயிரை தீயீட்டு துறந்தானே எம் தம்பி அவனின் இருதி ஊர்வளத்தில் கலந்து கொண்ட ம க இ க தோழர்களை பார்த்தும் இக் கேள்வியை கேட்க துப்பு இருக்கா சனியன் பிடித்த,சிங்கள பேரினவாத அடிவருடி,சிங்கள கைகூலீ தென்றலுக்கு ??????

-------------------------

தென்றல் உளறல் VIII//1815இல் குடியேறுகிற மலையகத் தமிழர்கள் இலங்கை நாட்டு பொருளாதாரத்திற்கு கணிசமான அளவு உழைத்து ஓய்ந்திருக்கின்றனர். அவர்கள் உழைப்பை எல்லாம் உறிஞ்சி கொழுத்த இலங்கைப் பேரினவாதம் அவர்களில் கணிசமான ஒரு பகுதியினரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய பொழுது ஈழப்போராளிக்குழுக்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது? தப்பித்து ஓடாமல் தாங்களும் முடிந்தால் சரவணனும் பதில் சொல்லவும்.//

இலங்கைப் பேரினவாதம் மலையகத் தமிழர்ககளில் கணிசமான ஒரு பகுதியினரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய பொழுது ஈழப்போராளிக்குழுக்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்று கேட்கும்  தென்றலுக்கு மூளை ,அறிவு சிறிதும் இல்லை என்பது  மட்டும் உறுதி. அவர்களை தீருப்பி அனுப்பும் கால கட்டத்தில்  ஈழப்போராளிக்குழுக்கலே இல்லை என்பது தான் நிசம். அதற்க்கு பின் உருவான வீடுதலை புளீகள் இயக்கம், சிங்களவன் மலையகத் தமிழர்களை குடிமக்களாகவே அங்கிகரிக்காத நிலையில், விடுதலை புலிகள் மலையகத் தமிழர்களை தம் இனமாக[ஈழ தமிழராக] சேர்த்து அவர்களுக்காகவும் தான் போராடினார்கள்

----------------------------

தென்றல் உளறல் IX //அப்பொழுது மெளனியாக இருந்துவிட்டு மலையகத் தமிழர்கள் ஈழத் தமிழர்கள் என்ற தேசிய இனத்திற்குள் இப்பொழுது வருவார்கள் என்று கதைகட்டுவது எதற்காக?//

 மூளை கொட்ட தென்றல் ,ஈழம் தேவை ஒரு நேர்மையான மீளாய்வு-பக்கம் 13-15″  கூருவது என்ன ? “மலையகத்தில் தோட்டத் தொழிலில் இருக்கக்கூடிய, பூர்விகமாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள், நம்முடைய வார்த்தைகளில் சொல்லப்போனால் சிறுபான்மை தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் கூட. ஈழத் தமிழர்கள் எனும் தேசிய இனத்திற்குக் கீழே இருக்க வேண்டியவர்கள் என்ற கண்ணோட்டத்தில் சொல்கிறார்கள்.தனி ஈழம் என்று சொன்னால், விடுதலைப் புலிகளினுடைய கண்ணோட்டத்தில் மலையகத் தமிழர்களும் சேர்ந்துதான். அவர்கள் வெளியிட்டிருக்கும் வரைபடத்தில் தமிழீழம் மலையகத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆனால் உண்மையில் 1815-க்கு பிறகு ஆங்கிலேயர்களால் குடியமர்த்தப்பட்ட, தமிழ் நாட்டை பூர்விகமாக கொண்ட தமிழர்கள் தனி இனத்தவர், தேசிய சிறுபான்மை இனத்தவர்கள்.”

By the way You can understand and conclude that…

சிங்களவன் மலையகத் தமிழர்களை குடிமக்களாகவே அங்கிகரிக்காத நிலையில், விடுதலை புலிகள் மலையகத் தமிழர்களை தம் இனமாக[ஈழ தமிழராக] சேர்த்து அவர்களுக்காகவும் தான் போராடினார்கள்


---------------------------

No comments: